search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகமதிப்பீட்டு மதிப்பெண்கள்"

    • மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண் வழங்கப்படும்போது ஆசிரியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
    • தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவதை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

    சென்னை:

    11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட கூடிய அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் குறித்த அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, அகமதிப்பீட்டுக்கு (தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து) மொத்தம் 10 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. இதில் வருகை பதிவுக்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்களுக்கும், உள்நிலைத் தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும், செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு 2 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண் வழங்கப்படும்போது ஆசிரியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவதை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

    இதேபோல், தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அகமதிப்பீட்டுக்கு அதிகபட்சம் 25 மதிப்பெண்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் வருகைப்பதிவுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்களும், உள்நிலைத் தேர்வுகளுக்கு 10 மதிப்பெண்களும், செயல்திட்டம், களப்பயணத்துக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

    ×