search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. சார்பில்"

    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும்
    • மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது

    'நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளரும், மாநக ராட்சி கவுன்சிலருமான ஸ்ரீலிஜா வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில், குளச்சல் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றியங்கள் வாரியாகவும், மாநகராட்சி பகுதிகள் வாரியாகவும், நகராட்சி மற்றும் ஊராட்சி வாரியாக வும் பூத் கமிட்டிகள் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த பூத் கமிட்டிகள் தொடர்ந்து சிறப்புற, பொறுப்பாளர்கள் ஒற்றுமையுடனும், கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும். குமரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் குளறுபடி தொடர்ந்து இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் 1 சென்ட் நிலத்தை கூட பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசையும், பத்திரப்பதிவு துறையையும் கண்டிப்பது. வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி கிளை மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும் தனிக்கவனம் செலுத்தி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ.வை நிய மித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெயகோபால், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், அணி செயலாளர் அக்ஷயா கண்ணன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    ×