search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wresting federation of india"

    சஞ்ஜிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்ற உலக பளுதூக்கும் பெடரேசனின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்கும் பெடரேசன் கூறியுள்ளது.
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் கடந்த மாதம் காமன்வெல்த் கேம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்ஜிதா பானு 53 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில் திடீரென நேற்று உலக பளுதூக்கும் பெடரேசன், சஞ்ஜிதா பானு மாதிரியை சோதனை செய்ததில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனத் தெரிவித்திருந்தது. இதனால் பதக்கம் பறிபோவதோடு, சஞ்ஜிதா பானு தடையை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சஞ்ஜிதா பானுக்கு எதிரான முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்கும் பெடரேசன் உறுதியளித்துள்ளது.



    இதுகுறித்து இந்திய பளுதூக்கும் பெடரேசன் பொதுச் செயலாளர் சஹ்தேவ் யாதவ் கூறுகையில் ‘‘நாங்கள் முடிவை பெற்ற பிறகு, வழக்கில் வாதாட முன்னணி வழங்கறிஞரை வாடகைக்கு அமர்த்துவோம். சஞ்ஜிதா பானு எந்தவித ஊக்கமருந்தையும் எடுத்திருக்கமாட்டார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் அப்பாவி என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.

    சஞ்ஜிதா பானு 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெலத் போட்டியின்போது 48 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×