search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Hepatitis Day"

    • கல்லீரல் அழற்சி நோய் தின கருத்தரங்கில் 155 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
    • தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் மதிப்பெண்கள் பெரும்வண்ணம் கருத்தரங்கு நடைபெறுகிறது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி நோய் தின கருத்தரங்கு நடைபெற்றது. சுமார் 155 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கல்லீரல் அழற்சி நோய் பொறுப்பு அலுவலர் மருத்துவர் அன்னபேபி வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து மருத்துவர்கள் கல்லீரல் அழற்சி நோய் பற்றி விளக்கிக் கூறினர். சிறப்பு விருந்தினர்களாக நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மருத்துவர்கள் மல்லிகா , மாரிமுத்து, முஸம்மில், தமிழருவி , கார்த்திக், மணிமாலா ஆகியோர் கல்லீரல் அழற்சி நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

    நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் வாழ்த்தி பேசினார்.

    அப்போது, தமிழகத்திலேயே,மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் கருத்தரங்கு மதிப்பெண்கள் பெரும்வண்ணம் கருத்தரங்கு நடைபெறுகிறது.

    இது மருத்துவமனையின் வளர்ச்சியை காட்டுகிறது. மேலும் தொடர்ந்து பல கருத்தரங்கங்கள் நடத்தி, பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவத்து றையின் புதுமைகளையும் வளர்ச்சிகளையும் அறிந்து, மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்போம் எனக் கூறினார்.

    மருத்துவர் ஜெரின் இவாஞ்சலின், மல்லிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை மருத்துவர்கள் மல்லிகா, கார்த்திக் செய்திருந்தனர். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    ×