search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens World Cup Hockey 2018"

    இன்று இரவு நடக்கும் உலக கோப்பை மகளிர் ஆக்கி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
    லண்டன்:

    14-வது உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் அரையிறுதிக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்பெயின் அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி காலிறுதியில் அயர்லாந்திடம் தோற்று வெளியேறியது.

    அரையிறுதி ஆட்டம் நேற்று இரவு நடந்தன. இதில் முதல் அரையிறுதியில் அயர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதின. அயர்லாந்து வீராங்கனை ஒபிளேகைன் 3-வது நிமிடத்திலும், ஸ்பெயினின் மாகஸ் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    அதன்பின் கோல் எதுவும் விழவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    இதில் அயர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 5 வாய்ப்பு முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டன. அடுத்த வாய்ப்பில் அயர்லாந்து கோல் அடிக்க, ஸ்பெயின் வீராங்கணை ஒலிலியா தவறவிட்டார்.

    2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    நெதர்லாந்து வீராங்கனை ஜோன்சர் (22 நிமி டம்), ஆஸ்திரேலியாவின் மார்கன் (54 நிமிடம்) கோல் அடித்தனர். இதையடுத்து நடந்த பெனால்டி ஷுட்டில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன் னேறியது.

    நடப்பு சாம்பியனான நெதர்லாந்து இதுவரை 7 முறை பட்டம் வென்று உள்ளது. அயர்லாந்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

    இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    முன்னதாக நடக்கும் 3-வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
    ×