search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WELFARE SCHEMES"

    • அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் வலியுறுத்தினார்.
    • தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ள ப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாய பணிகள் தற்போது தொடங்கியு ள்ளதை முன்னிட்டு தேவை யான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது. அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பயனா ளிகளுக்கு முழுமையாக கிடைத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது.
    • மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி, செப்.17-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், 3- ம்பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. மேலும், -ம் பாலினத்தவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூத்த திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் 37 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும், திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக தொண்டு நிறுவன உதவியுடன் 2 திருநங்கைகளுக்குதையல் எந்திரங்களும், திருநங்கைகளின் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 7 திருநங்கைகளுக்கு ரூ.3,50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் 38 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 60 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 2 திருநங்கைகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான வீடுகள், திருநங்கைகள் அடையாளஅட்டை 62 திருநங்கைகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 4 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திருநங்கைகள் வா ழ்வாதார மேம்பாட்டுக்காக 100 ஆடுகள் வழங்க ப்படவுள்ளது. மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனை வருக்கும் கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெற்று,தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சிறப்பு முகாமில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டனர்.

    • புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் என்ற தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை டாக்டர் இளவழகன், டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் சகோதரர் ஆறுமுகம், மருமகன் ரவிச்சந்திரன், மகள் அரசம்மா தேவி ரவிச்சந்திரன், மருமகள் முத்து காமாட்சி சத்திய வன்னன், பேத்திகள் மோனி ஸ்ரீ தாரணி குமாரி மற்றும் உறவினர்கள், அரிச்சுவடி ஊழியர்கள் நண்பர்கள் செய்திருந்தனர்.

    • மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.2.77 கோடி மதிப்பில் மாணவியர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வெங்கடபிரியா தலைைம வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது,

    முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மையாக திகழ்ந்து வருகிறது. வேப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக மாணவர்கள் விடுதி அமைப்பதற்கு ரூ.2.77 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. வேப்பூர் அரசினர் மகளிர் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுடைய வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுடைய வசதிக்காக மருவத்தூர் குரும்பபாளையம் எறையூர் வரையிலான பேருந்து வழித்தடம் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கென 21,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை தவறாக நடத்துகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ×