search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Helps"

    • முன்னோடி மனு நீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப் பட்டது.
    • 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா அருளாட்சி என்ற திருமலா புரம் கிராமத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப் பட்டது. இவற்றில் 108 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதி உள்ள 85 மனுக்களுக்கு பதிலும், 172 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தாசில்தார் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மனுநீதி நாள் முகாமில் மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சப்- கலெக்டர்கள் ஷீலா, சுதா, ராஜ மனோகரன், கந்தசாமி, சங்கர நாராயணன், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஆத்துவழி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், துணை தாசில்தார்கள் திருமலைச்செல்வி, சரவணன், சிவப்பிரகாசம், கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் வள்ளி யம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி நன்றி கூறினார்.

    முன்னதாக வனத்துறை யினர் இயற்கையாக விளை விக்கப்பட்ட காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் கிள்ளிகுளம் வேளாண் மாணவிகள் வேளாண் பொருட்களையும் அது குறித்த கையேடுகளையும் காட்சிப்படுத்திருந்தனர். அதனை சதன் திரு மலைக் குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், டி.ஆர்.ஓ. பத்மாவதி, சங்கர ன்கோவில் ஆர்.டி.ஓ. டாக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தனர்.

    ×