search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water discharge"

    • கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாலாஜா தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மகேந்திரவாடி, சக்கரமல்லூர், தூசி, காவேரிப்பாக்கம் ஆகிய பாசன ஏரிகளுக்கு விநாடிக்கு 855 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

    855 கனஅடி நீர் வெளியேற்றம்

    வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு தடுப்பணைக்கு தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 257 கனஅடியும், மகேந்திரவாடி ஏரிக்கு 110 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு140 கன அடியும், தூசி ஏரிக்கு 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மொத்தமாக வாலாஜாப்பேட்டை அனைக்கட்டு தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 872கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

    ×