search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "war torn"

    ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 மாதங்களில் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. #CiviliandeathsinAfghanistan #AfghanistanCiviliandeaths
    காபுல்:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கரவாதிகளை வேட்டையாடவும், எல்லைப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவதிகளை கொல்லவும் ஆப்கானிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடங்கள்மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், இந்த இருதரப்பு மோதலில் கடந்த 6 மாதகாலத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 1,692 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் நிலவரங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முகமை தெரிவித்துள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட உயிரிழப்பு புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CiviliandeathsinAfghanistan  #AfghanistanCiviliandeaths
    ×