search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virgin galactic"

    விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தின் விமானம், விண்வெளியின் எல்லை வரை சென்று வெற்றிகரமாக திரும்பி உள்ளது. #VirginGalactic #SpaceShipTwo #SpaceTour
    கலிபோர்னியா:

    அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் காலக்டிக் நிறுவனம், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானத்தை உருவாக்கி, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மூன்று முறை நடத்தப்பட்ட சோதனை தோல்வியடைந்த நிலையில், நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. விண்வெளிக்கு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம், கலிபோர்னியாவின் மோஜவே பாலைவனத்தில் இருந்து புறப்பட்டு, விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று வெற்றிகரமாக திரும்பியுள்ளது.

    ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு சென்றது. இந்த சோதனை திருப்திகரமாக அமைந்ததால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் புளூ ஆரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் காலக்டிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    2014ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின்போது நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதால், விண்வெளி சுற்றுலா திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது குறிப்படத்தக்கது.  #VirginGalactic #SpaceShipTwo #SpaceTour
    ×