search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar statue work producing"

    விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் போச்சம்பள்ளி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    போச்சம்பள்ளி:

    இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு, வீடுகள் மற்றும் வீதிகளில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு  வருகின்றன.

    அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மங்களப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. மங்களப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ சேகர் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு கை வண்ணத்தில் இந்த சிலைகள் தயாரித்து வருகின்றார். இவையானவை மயில், ஐந்து தலை நாகப்பாம்பு, யானை, சிம்மாசனம் உள்ளிட்டவைகளில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள், சிவன் பார்வதி ஆகியோரின் கீழ் அமர்ந்துள்ள விநாயகர் என 10-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி, விநாயகர் சதுர்த்திக்காக காத்திருக்கின்றன.         

    மேலும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய  கிழங்குமாவு, வாட்டர் கலர் பெயிண்டை கொண்டு சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையிலேயே சிலைகளை தயாரித்து பல வண்ணங்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    இந்த ஆண்டு அரை அடி முதல் 8 அடி வரை பல அளவுகளில் விநாயகர் சிலைகளை உருவாக்கி விற்பனைக்காக வைத்திருக்கிறோம். அளவு மற்றும் வடிவத்துக்கேற்றவாறு ரூ.50 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலையை நிர்ணயித்துள்ளோம். பக்தர்கள் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளை தேர்வு செய்து, முன்தொகை கொடுத்து வருகின்றனர்' என்றார்.
    ×