search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VenkaiahNaidu"

    சென்னையில் நடைபெற்ற சிப்பெட் பொன் விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிப்பெட் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். #VenkaiahNaidu #CIPETFunction
    சென்னை:

    மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) ஐம்பதாவது ஆண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு  உரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:

    தற்போது வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் 1950 முதலே வாகனங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இவை வாகனங்களின் வேகத்திற்கும், ஆற்றலை சேமிக்கவும் முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக விளையாட்டிற்காக பயன்படும் வாகனங்களின் சீட் பெல்ட், ஏர் பேக்ஸ் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாகனங்களின் எடை கணிசமாக குறைந்துள்ளது.



    மேலும் வானூர்தி தொழில்நுட்பங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கார்பன் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் , கார் தயாரிப்பாளர்களுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு ஆகும். இதன் மூலம் செயற்கையான மனிதர்களின் உடல் பாகங்கள் எளிமையான முறையில் செய்யப்படுகின்றன.

    2017-2018 ம் ஆண்டில் 7.5% ஆக இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி , 2018-2019 ல் உயரும். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சிப்பெட்டின் பங்கு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

    உலகளாவிய பாலிமர் தொழில்சாலைகளில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும். சிப்பெட் இதற்கான பாலமாக செயல்படுகிறது. மேலும் சிப்பெட் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சிப்பெட் நிறுவனம் நாட்டிற்கு ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது. மக்களுக்கு பிளாஸ்டிக்கின் மறுசுழற்சி பற்றியும், அதன் முறையான பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சிப்பெட் நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி சதானந்த கவுடா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்), உயர்தர பரிசோதனைக் கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன. #VenkaiahNaidu #CIPETFunction
    ×