search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Police Exam"

    உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் தேர்வில் மோசடி செய்தது தொடர்பாக மீரட்டில் 22 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். #UPPoliceExam #HiTechCheating
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நேற்றும் இன்றும் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையில் இறங்கிய சிறப்பு அதிரடிப் படை போலீசார் நேற்று முன்தினம், கோரக்பூரில் 11 பேரையும், அலகாபாத்தில் 3 பேரையும் கைது செய்தனர்.

    அத்துடன், இந்த ஹைடெக் மோசடிக் கும்பலின் தலைவனைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



    இந்நிலையில், மீரட் நகரில் போலீசார் நடத்திய சோதனையில் மோசடியில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #UPPoliceExam #HiTechCheating 
    உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெறும் போலீஸ் தேர்வில் நவீன முறையில் மோசடி செய்வதற்கு தயார் நிலையில் இருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #UPPoliceExam #HiTechCheating
    கோரக்பூர்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு இன்றும் நாளையும் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 850 மையங்களில் சுமார் 22 லட்சம் நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்நிலையில், தேர்வில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய திட்டமிட்டிருந்த நபர்களை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்துள்ளனர். கோரக்பூரில் 11 பேரும், அலகாபாத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையில் அவர்கள் ஹைடெக் முறையில் தேர்வர்களுக்கு பதில்களை அனுப்புவதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றிருந்தது தெரியவந்தது.

    தேர்வு எழுதும் நபர் தேர்வு அறையில் தனக்கு வினாத்தாள் வழங்கப்பட்டதும், அதனை கண்காணிப்பாளருக்கு தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து, அதனை வெளியில் உள்ள ஒரு நபருக்கு அனுப்புவார். அதன்பின்னர் நொடிப்பொழுதில் அது விடைத்தாள் திருத்தம் செய்யும் ஒரு நபருக்கு பகிரப்பட்டு, அவர் ஸ்பை மைக் மூலம் விடைகளை தேர்வு மையத்தில் உள்ள நபருக்கு தெரிவிப்பதுதான் திட்டம்.

    இவ்வாறு விடைகளை தெரிவிப்பவர்கள் ஒரு விண்ணப்பதாரருக்கு 5 லட்சம் ரூபாய் என பேரம் பேசி வாங்கியிருப்பது விசாரணயில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அத்துடன், இந்த ஹைடெக் மோசடிக் கும்பலின் தலைவனைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.,

    இதேபோல் கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் ஹைடெக் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #UPPoliceExam #HiTechCheating

    ×