search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trends Twitter In Tamil Nadu"

    தி.மு.க. செயல் தலைவர் லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளதையொட்டி #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin
    சென்னை:

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்தபோது, அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்தன. அவர்களை திரும்பி போக சொல்லும் வகையில் #GoBackModi #GoBackAmitSha ஆகிய ஹேஷ்டேக்குடன் இணையதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.



    இந்நிலையில், லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.க.வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  #GoBackStalin (திரும்பி போ ஸ்டாலின்) என்ற  ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது.

    இதற்கு போட்டியாக தி.மு.க ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினை வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுவும் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin
    ×