search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transactions"

    • நேற்று முதல் காலை 8மணி முதல் இரவு8மணி வரை (12 மணி நேரம்) திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் செயல்படும்.
    • சேலம், சூரம்பட்டி தலைமை தபால் நிலையத்தில் கடந்த 3ல் இத்திட்டம் துவங்கப்பட்டது.

    திருப்பூர்:

    அனைத்து தரப்பு மக்களிடம் அவர்கள் நேரத்துக்கு ஏற்ற தபால் சேவையை கொண்டு சேர்க்க 12 மணி நேரம் தபால் சேவை வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சேலம், சூரம்பட்டி தலைமை தபால் நிலையத்தில் கடந்த 3ல் இத்திட்டம் துவங்கப்பட்டது.

    நேற்று முதல் காலை 8மணி முதல் இரவு8மணி வரை (12 மணி நேரம்) திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் செயல்படும். திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் இதுவரை சேமிப்பு, பணபரிவர்த்தனை, மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல் அனைத்தும் மாலை 3 மணி வரையும், பதிவு தபால், துரித தபால் சேவை பதிவு ஆகியவை மாலை, 5 மணி வரையும் நடைபெற்று வந்தது.

    இந்த நடைமுறை மாற்றப்பட்டு சேமிப்பு பண பரிவர்த்தனை, புதிய சேமிப்பு கணக்கு, ஆயுள் காப்பீட்டு பிரிமீயம், மின்கட்டணம், போன் கட்டணம், செல்வமகள் சேமிப்பு திட்டம், பதிவு மற்றும் விரைவு தபால், பார்சல் சேவை, அயல்நாட்டு தபால் சேவை, மணியார்டர் சேவை உள்ளிட்ட பரிவர்த்தனைகள் காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள், தபால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகர் தெரிவித்துள்ளார்.

    ×