search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Farmers Protest"

    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் அழுத்தம் கொடுத்தனர்.
    • கர்நாடகாவில் காவிரி மற்றும் கிருஷ்ணா நீர்பிடிப்பு பகுதிகளில் நிகழாண்டில் 66 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அப்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. மேலும் அன்றைய தினமே குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். இதனால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். 5.20 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் நாட்கள் செல்ல செல்ல அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. இன்றைய நிலவரப்படி 46 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டி வந்தது.

    ஏற்கனவே ஜூன், ஜூலை. ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை மிக மிக சொற்ப அளவே கர்நாடகா அரசு வழங்கியது. ஆகஸ்ட், இந்த மாதத்துக்காக தண்ணீரை சுத்தமாக வழங்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருக தொடங்கின. பல இடங்களில் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். கர்நாடகா அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுவை பயிர்களின் தற்போதைய நிலை குறித்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் காவிரி மற்றும் கிருஷ்ணா நீர்பிடிப்பு பகுதிகளில் நிகழாண்டில் 66 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே வருகிற 12-ம் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனேவ வேதனையில் உள்ள தமிழக விவசாயிகள் இந்த மனு தாக்கலால் மேலும் கவலை அடைந்துள்ளனர். எஞ்சிய பயிரையாவது காப்பாற்ற முடியுமா ? என பரிதவிப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது :-

    வரும் 12-ம் தேதிக்கு காவிரி நீர் தர மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு மனுதாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு கோர்ட் உத்தரவுப்படி வழங்க வேண்டிய தண்ணீரை தான் கேட்கிறோம். கூடுதலாக கேட்கவில்லை.

    ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவே அதிகமாக உள்ளது. ஆகஸ்ட், இந்த மாதத்திற்கான தண்ணீரை சுத்தமாக வழங்கவில்லை.

    இதனால் குறுவை பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து வஞ்சிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை தடையின்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது முதல் கட்டம் தான்.

    21-ம் தேதி காவிரி நீர் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் புதிய அமர்வில் வருகிறது. அதில் கோர்ட்டின் அணுகுமுறையை பொறுத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என்றார்.

    ×