search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni News: municipal members"

    மதுரை-தேனி ரெயில் சேவை கொண்டு வந்த மோடிக்கு பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்
    பெரியகுளம்:

    பெரியகுளம் நகர் மன்றக் கூட்டம் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், அலுவலக மேலாளர் விஜய் தீர்மான நகல்களை வாசித்தார். இக்கூட்டத்தில் பொது சுகாதாரம், மீன் விற்பனையை மார்க்கெட் பகுதிக்கு மாற்றி அமைத்தல், முக்கிய வீதிகளில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் வழிகாட்டுதல் குழு தலைவர்சண்முக சுந்தரம்; 12 ஆண்டுக்கு பிறகு மதுரை - தேனி அகல இரயில் பாதை சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்திட்டத்திற்கு தொடர் முயற்சி செய்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கு நகர் மன்ற உறுப்பினர்கள், தலைவர் ஆகியோரும் நன்றி தெரிவித்தனர்.

    நகர்மன்ற உறுப்பினர் குமரன் திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி, வீட்டுவரியினை உடனே செலுத்த தீர்மானம் கொண்டு வருவது சாத்தியமல்ல. இதற்கு மக்களுக்கு நேரடியாக ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பதில் அளித்த தலைவர் சுமிதா சிவக்குமார்; உங்கள் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் குருசாமி, ராணி நாராயணன், சத்யா தண்டபாணி, முத்துலட்சுமி, சந்தானலட்சுமி சுந்திரபாண்டியன், கிஷோர்பானு நூர்முகமது, பால்பாண்டி, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×