search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEMPLE PROCESSION"

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.

    காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கா ரத்துடன் தீபாராதனை நடைபெற்றது பின்னர் பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பிற்பகல் தொடங்கிய காளியம்மன் தேரை எம்.எல்.ஏ. சரவணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் வி சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுகுணாகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் சீதாராமன், முருகதாஸ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்கள் சீர் வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    தேரோட்டம் நடக்கும் வீதிகளில் உள்ள மின் வயர்கள் மின்வாரிய சிலம்பரசன், பணியா ளர்கள் உடனுக்குடன் சீரமைத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் செய்து இருந்தனர். இன்று காலை பகல் ரத உற்சவம் நடக்கிறது.

    முன்னதாக எம் எல் ஏ சரவணன் படவேடு பெருமாள்பேட்டை பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

    காளசமுத்திரம் சாலை யில் பள்ளக்கொல்லை ஏரிக்கோடி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகளை எம் எல் ஏ சரவணன் பார்வையிட்டு, மழைக்காலம் தொடங்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் நே ற்று நடைபெற்றது. கீரமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழு த்து வந்து நிலையை அடைந்தனர். இதில், கீரமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ×