search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEMPLE PROCESSION"

    • பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
    • பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.

    பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதே போல புஜங்கீஸ்வரர் கோவிலிலும் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த 2 கோவில்களும் சார்பாக தீபாவளி பண்டிகையின் போது திருவிழா நடத்தப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீதேவி, துளசியம்மாள் சமேத சென்றாய பெருமாளும், சிவகாமி உடனுறை புஜங்கீஸ்வரரும் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

    பெருமாளும், சிவனும் அடுத்தடுத்த தேரில் நகர்வலம் வந்தனர். ராஜவீதியில் தொடங்கிய இந்த நகர் வலத்தில் ஒவ்வொரு வீடாக 2 சாமிகளுக்கும் தேங்காய் பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் நேர்த்திக் கடனாக பெண்கள், குழந்தைகள் தேரை இழுத்து வந்தனர்.

    கடந்த காலங்களில் முறையாக நடத்தப்பட்டு வந்த திருவீதி உலா நிகழ்ச்சி கடந்த 19 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோவில் நிர்வாகிகள் மற்றும் கட்டளைதாரர்களால் திருவீதி உலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது.
    • தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சாமி கல்யாணம் மற்றும் கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்ட விழா நடைபெற்றது.

    எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு

    விழாவில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், தமிழரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர், அறிவழகன், ரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சாமி திருவீதி உலா புறப்பாடு மற்றும் சத்தாபரணம், நையாண்டி மேளம் நடைபெற்றது. தேரோட்டம் விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவல் குழு தலைவர் நைனா குமார் மற்றும் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது
    • பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்த‌னர்

    ராணிப்பேடட்டை:

    வாலாஜா நகரில் அணைக்கட்டு சாலையில் பழமைவாய்ந்த ஸ்ரீ சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ரூ.25 லட்சம். மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடைக்கொண்ட தேர் செய்யப்பட்டு கடந்த 10-ந் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது.அலங்கரிங்கப்பட்ட நேரில் சுந்தரவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மங்கல வாத்தியங்களுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது .

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

    தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பேரில் வைத்து எழுந்தருளினார்.

    இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்கா ரங்களும் பூஜை களும் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டு தேரில் எழுந்தருளினார்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இரு தேரோட்ட நிகழ்ச்சி களிலும் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரு இடங்களில் நடந்த தேர் திருவிழாவில் குடியாத்தம் புதுப்பேட்டை, பிச்சனூர், காளியம்மன பட்டி, சாமியார்மலை உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

    தெருக்களில் வண்ண விளக்கு களால் அலங்கரி க்கப்பட்டு பல இடங்களில் அன்னதான மும் தண்ணீர் பந்தலும் அமைக்க ப்பட்டுள்ளது.

    காளியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் ராட்சதமாலைகள் டிராக்டரில் வைத்தும் பொக்லைன் எந்திரத்தில் வைத்தும் கொண்டு வந்து அம்மனுக்கு அணிவித்தனர்.

    இரு நிகழ்ச்சிகளிலும் கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள், விழா குழுவினர், திருப்பணி கமிட்டியினர், நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு, அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது.
    • விழாவையொட்டி காலை சந்தி பூஜை நடந்தது.

    ஆத்தூர்:

    தலைவாசல் அருகே வீரகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை சந்தி பூஜை நடந்தது. இதையடுத்து மதுரகாளியம்மன் தேரில் எழுந்தருளினார். மதியம் தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஆத்தூர், தலைவாசல் ஆறகளூர், வி. இராமநாதபுரம், கிழக்கு ராஜபாளையம், திட்டச்சேரி, கவர்பனை, வெள்ளையூர், பகடப்பாடி, பூலாம்பாடி, இலுப்பநத்தம், வேப்பம்பூண்டி என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை நின்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், குங்குமம் என பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மதுர காளியம்மனுக்கு எலுமிச்சம் மாலை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவில் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா
    • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் முத்துக்குமாரசாமி கோவிலில் 17-ம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விநா யகர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. அன்னம், ஆடு, மயில், நாகம் ஆகிய வாகனங்களில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாணமும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. கே.எம்.சுப்பிரமணியம், டாக்டர் லீலா சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எம்.நவீந்திரன், அரசு ஆசிரியர் எஸ். மகேஸ்வரி ரவீந்திரன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் என்.வி.எஸ். சங்க தலைவர் எஸ்.ராஜா, துணைத் தலைவர் டி.கே.எஸ். ஐயப்பன் உள்பட ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

    • திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை போல் கிரிவலத்தால் புகழ் பெற்று வரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமி, அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது தொடர்ந்து ஸ்தல நாயகர் திரிபுர சம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தரு ளினர்.

    பின்னர் தேரில் சிவாச் சாரியார்கள் வேதமந்தி ரங்கள் ஓத, மகாதீபாராத னை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திர ளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.இந்த தேரோட்டத்தில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், நகரசபை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கள் எம்.சி. சம்பத், எம்.சி.தாமோதரன், வக்சீல் எம்.சி.தண்டபாணி, உதவி ஆணையாளர் சந்திரன், தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர்மகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, செயல் அலுவலர் மகாதேவி, ராமலிங்கம், வேல்விழி, ரமேஷ்பாபு, ஆய்வாளர்கள் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா,துணை தாசில் தார் சிவக்குமார், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 8.45 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 7 மணியளவில் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்து,திரிபுர சம்ஹார மூர்த்தி திருத்தேரில் ஐதீக முறைப்படி முப்புரம் எரித்த காட்சி நடைபெற உள்ளது.

    • 1,700 போலீசார் பாதுகாப்பு
    • குடியாத்தத்தில் பக்தர்கள் குவிந்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை காலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    திருவிழாவில் 5 லட்சத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முத்தியாலம்மன் கோவிலில் புறப்படும் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடியாத்தத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருவிழாவை யொட்டி குடியாத்தம் நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பேரணாம்பட்டு சாலை, மேல்பட்டி சாலை, வேலூர் சாலை களில் தற்காலிக பஸ் நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்லும் சாலை யில் குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

    கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ் வாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது. கெங்கையம்மன் கோவிலில் இருந்து இன்று காலை புறப்படும் தேர், சிரசு ஊர்வலம் வரும் பாதையில் சென்று முத்தியாலம்மன் கோவிலை அடைந்து பின்னர் கெங்கையம்மன் கோவிலை மீண்டும் வந்தடையும்.

    தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தேரின் மீது மிளகு, உப்பு தூவி நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, "குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்பு பணியில் 2 எஸ். பி.,க்கள், ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிகள் 13 டிஎஸ்பி கள் உள்பட 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் முறையாக 2 பட்டாலியன் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது" என்றார்.

    அப்போது, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், டி.எஸ்.பி. ராமமூர்த்தி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தினந்தோறும் மாலை சப்பாரம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னபட்சி வாகனம், யானை மற்றும் பூந்தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    23-ந் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்று காலை அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றில் விடுதலும், 28-ந் தேதி காலை மஞ்சள் நீராடலும், மாலை முத்துபல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது.
    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு‌ அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களில் காப்பு கட்டும் விழாவும் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெற்றது.

    27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ஶ்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 29-ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்திபூஜை நடைபெற்றது.
    • மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு ௮ மணிக்கு யானை வாகன பவனியும் நடைபெற்றது.

    மங்கலம் :

    மங்கலத்தை அடுத்த மலைக்கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 29-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்திபூஜை நடைபெற்றது. மாலை நேரங்களில் சாமி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மயில் வாகன பவனி நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன பவனியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிமை) காலை 6 மணிக்கு விநாயகர், குழந்தை வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானையுடன் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் மாலை 3 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன பவனி நடைபெறுகிறது. நாளைமறுதினம் காலை 11 மணிக்கு மகாதரிசனம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் காலை முதலே நேர்த்திக்கடன் செலுத்த நூற்றுக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டு காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தேரின் மீது உப்பு மிளகு உள்ளிட்டவைகளை வீசி எறிந்து வணங்கினர்.

    இந்த தேரோட்டத்தில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் தேர்திருவிழா குழுவினர், ஆலய விழா கமிட்டினர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா இன்று காலையில் நடைபெற்றது இந்த தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதாசிவப்பிரகாசம், முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஏ.நடராஜன், சண்முகம், வி.என்.தனஞ்செயன். கே.எம்.ஜி.விட்டல், எஸ்.எஸ்.பி.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், எம்.எஸ்.குகன், வழக்கறிஞர் எம்.வி. ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தேர் கமிட்டியினர் விழா குழுவினர் இளைஞர் அணி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×