search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
    X

    கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

    • 1,700 போலீசார் பாதுகாப்பு
    • குடியாத்தத்தில் பக்தர்கள் குவிந்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை காலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    திருவிழாவில் 5 லட்சத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முத்தியாலம்மன் கோவிலில் புறப்படும் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடியாத்தத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருவிழாவை யொட்டி குடியாத்தம் நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பேரணாம்பட்டு சாலை, மேல்பட்டி சாலை, வேலூர் சாலை களில் தற்காலிக பஸ் நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்லும் சாலை யில் குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

    கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ் வாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது. கெங்கையம்மன் கோவிலில் இருந்து இன்று காலை புறப்படும் தேர், சிரசு ஊர்வலம் வரும் பாதையில் சென்று முத்தியாலம்மன் கோவிலை அடைந்து பின்னர் கெங்கையம்மன் கோவிலை மீண்டும் வந்தடையும்.

    தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தேரின் மீது மிளகு, உப்பு தூவி நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, "குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்பு பணியில் 2 எஸ். பி.,க்கள், ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிகள் 13 டிஎஸ்பி கள் உள்பட 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் முறையாக 2 பட்டாலியன் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது" என்றார்.

    அப்போது, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், டி.எஸ்.பி. ராமமூர்த்தி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×