search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Idol Robbery In Karaikal"

    காரைக்காலில் கோவில் சிலையை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் ரெயில் நிலையம் அருகில் உள்ள கீழவெளி ராஜுவ்காந்தி நகரில் கன்னியா குறிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடந்த 17-ந் தேதி இரவு கோவில் நிர்வாகக்குழு தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஊர்க்காரர்கள் பூட்டி விட்டு சென்றனர்.

    18-ந் தேதி காலை வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றபோது, கோவில் கதவின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான அம்மன்சிலை திருட்டுப்போனது தெரிவந்தது.

    மேலும், கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து, ராஜமாணிக்கம் நகர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ராஜுவ்காந்தி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜுவ்காந்தி நகரில் உள்ள அரசு விளையட்டுத்திடல் அருகே நின்ற ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சீர்காழி பன்னீர்கோட்டகத்தை சேர்ந்த பாலசந்தர் (வயது47) என்பதும், 17-ந் தேதி நள்ளிரவு கோவிலில் சிலையை திருடி, அதிக எடை காரணமாக தூக்கமுடியாமல், அருகில் இருந்த அரசு விளையாட்டுத்திடல் செடி-கொடிகளுக்கு இடையில் பதுக்கி வைத்து விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.

    மேலும் சீர்காழி பழையபாளையத்தைச் சேர்ந்த நண்பர் செந்தில் என்கிற சங்கராயணனுடன் (56) மோட்டார் சைக்களில் வந்து சிலையை எடுக்க சென்றபோது, போலீசார் வந்ததால், தப்பியோடியதாகவும், தன்னைப்போலவே சங்கராயணனும் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீசார் பாலசந்தரை கைது செய்தனர். அவர் மறைத்து வைத்திருந்த சிலை மற்றும் உண்டியல் பணம் ரூ.40-ஐயும் மீட்டனர். பின்னர், பாலசந்தர் கொடுத்த முகவரியின் பேரில், சீர்காழி சென்று சங்கராயணனைனையும் போலீசார் கைது செய்தனர். சிலை திருடர்களை குறுகிய காலத்தில் பிடித்து, சிலையை மீட்ட போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா, எஸ்.பி வம்சிதரரெட்டி ஆகியோர் பாராட்டினர்.

    ×