search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tea master death"

    • திண்டுக்கல் அருகே தீ விபத்தில் காயமடைந்த டீ மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • தீ விபத்தில் டீ மாஸ்டர் பலி

    கன்னிவாடி:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தருமத்துப்பட்டியை சேர்ந்த மதுரைவீரன்(45) என்பவர் டீ மாஸ்டராகவும், தண்டபாணி(53) என்பவர் வடை மாஸ்டராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று காலையில் சிலிண்டரை மதுரைவீரன் பற்றவைக்க முயன்றபோது அதில் கசிவு இருந்துள்ளது. இதனால் திடீரென தீப்பிடித்து மதுரைவீரன் மற்றும் தண்டபாணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மதுரைவீரன் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு வனிதா(32) என்ற மனைவியும், மகாலட்சுமி, அபிநயஸ்ரீ ஆகிய 2 மகள்களும், மணிபாரதி என்ற மகனும் உள்ளனர். விபத்தில் காயமடைந்த தண்டபாணி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×