search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac bomb threat"

    டாஸ்மாக் மதுக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். #Tasmac

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனின் செல்போனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர் பெதப்பம்பட்டி டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறினார்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். உடுமலை டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஜெய்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர்.

    அங்கு மது அருந்திய நபர்களிடம் வெடிகுண்டு குறித்து கூறினர். மது அருந்திக் கொண்டிருந்த நபர்கள் மதுபாரில் இருந்து ஓட்டம் பிடித்தனர். விற்பனை உடனே நிறத்தப்பட்டது. டாமாக் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் கோவையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    டாஸ்மாக் கடையை அங்குல அங்குலமாக சோதனை செய்தனர். 1 மணிநேர சோதனை பின்பு வெடிகுண்டு ஏதுவும் இல்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைக்கு முன்பு ஒரு வாலிபர் கையில் வாளுடன் டாஸ்மாக் கடையை உடனே திறக்க வேண்டும். இலவசமாக மதுபானம் கொடுக்க வேண்டும். மதுபானத்திற்கு பணம் கேட்டால் இந்த கடையை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன் என்றும் வாளை சுழற்றியவாறு பொதுமக்களை அச்சுறுத்தினார்.

    அக்கம் பக்கத்தினர் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது மிரட்டல் விடுத்த வாலிபர் தப்பி ஓடினார். போலீசார் விரட்டிப்பிடித்து அவரிடம் இருந்த வாளை கைப்பற்றினர். விசாரணையில் அவர் அதே பகுதியில் வடுகபாளையம் லிங்கமநாயக்கன்புதூர் நடுவீதியை சேர்ந்த டிரைவர் விமல் (வயது 41) என்பது தெரியவந்தது. விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையைடுத்து போலீசார் அவரை கைது செய்து உடுமலை சிறையில் அடைத்தனர்.

    ×