search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tandoor murder case"

    டெல்லியில் மனைவியை சுட்டுக் கொன்று தந்தூரி அடுப்பில் போட்டு எரித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சுஷில் குமார் சர்மாவை விடுதலை செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #Tandoormurder #HCorders #SushilSharma
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுஷில் குமார் சர்மா. இவரது மனைவி நாய்னா சாஹ்னி. நாய்னாவுக்கும் வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த சுஷில் குமார் கடந்த 1995-ம் ஆண்டு தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

    அவரது பிரேதத்தை மறைக்கும் முயற்சியில் உடலை துண்டங்களாக வெட்டி, ‘தண்டூரி’ எனப்படும் வறுவலுக்காக இறைச்சியை தீய்க்கும் ‘ஓவன்’-ல் அந்த துண்டங்களை போட்டு தீய்த்து அழிக்க முயன்றார். அதனால் இந்த கொலை வழக்கை ‘தண்டூரி’ கொலை வழக்கு என ஊடகங்கள் வர்ணித்தன.

    இந்த கொலை தொடர்பான தகவல் கசிந்ததும் சுஷில் குமார் சர்மா கைது செய்யப்பட்டார். ஆனால், சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் அவரை குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி போலீசார் மிகவும் திணறினர். நாய்னா சாஹ்னி உடலின் மிச்சசொச்சங்கள் இருமுறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    அப்போது மிகவும் அரிதாக இருந்த மரபணு பரிசோதனை மூலம்  கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் போலீஸ்தரப்பு இந்த வழக்கை நடத்தியது. இவ்வழக்கில் சுஷில் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது ஆயுள் தண்டனை காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுஷில் குமார் சர்மா டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார்.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், சங்கீதா திங்ரா சேஹ்கல் ஆகியோரை கொண்ட அமர்வு சுஷில் குமார் சர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்து விட்டதால் அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர். #Tandoormurder #HCorders #SushilSharma
    ×