search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை Siege of cleaning staff at Vellore Corporation office"

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கூலி தூய்மை தொழிலாளர்கள் நேற்று முதல் 1-ந் தேதி வரை 10 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியில் தெருகூட்டும் தூய்மை பணியாளர்கள், தரம் பிரிக்கும் தொழிலாளர்கள் என கடந்த 5 ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை செய்கின்றனர். நிரந்தர பணியாளர்களை விட கூலித்தொழிலாளர்கள் இரண்டு மடங்கு உடல் உழைப்பை செலுத்தி வேலை செய்கிறார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படவில்லை. எனவே வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    2-வது நாளாக இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தினார். 

    ஆனாலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
    ×