search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "If petrol and diesel prices are not reduced Protest will be held against the Tamil Nadu government-பெட்ரோல்"

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என ஓசூரில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டியில் கூறினார்.
    ஓசூர், மே 24-
    பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும், பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இந்த  கூட்டத்தில்,  அடுத்த ( ஜூன்) மாதம் 1 - ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும்  நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளது. 

    இந்த விலை குறைப்பிற்கு மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டார்கள் என்பது காரணமல்ல, இந்திய மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலை குறைப்பை செய்துள்ளார்கள்.
    மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்துள்ளார்கள். ஆனால், தமிழக அரசு இதுவரை விலையை குறைக்கவில்லை, தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை 30%  குறைப்போம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் 3 ரூபாய் மட்டும்தான் விலை குறைத்துள்ளனர்.

    தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை 30% குறைக்காவிட்டால் அடுத்த கட்டமாக ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து விட்டு, தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம்  நடத்தப்படும். நாங்கள் 72 மணி நேரம் அவகாசம் கொடுத்துள்ளோம். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். இந்த ஆட்சியை அகற்றும் போராட்டம், இன்னும் 3 மாதங்களில் நடத்தப்படும்". இவ்வாறு கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×