search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of documents- Economic Crime Division Police Action"

    ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.36 லட்சம் பணம்,ஆவணங்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
    ஓசூர், 

    ஆருத்ரா கோல்டு என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் இதன் கிளை, ஓசூர்-பாகலூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. 

    இந்த நிறுவனம்.அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து , நேற்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உள்பட அதன் 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

    ஓசூரில், 4 மாதங்களாக செயல்படும் இந்த நிறுவனத்தின் கிளையில், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் இதுவரை 700 பேர் வரை 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. 

    ஒட்டுமொத்தமாக 14 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஒசூரில் உள்ள  கிளை அலுவலகத்தில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான 10 போலீசார், ஓசூர் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சைபர்கிரைம் போலீசார்,காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை  மேற்கொண்ட சோதனையில் 36 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 4 கணினிகள்,2 ஹார்டு டிஸ்க், பிரிண்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ×