search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம் Intensive care unit started at Vellore Bentland Governmen"

    வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் அரசு பெண்லேண்ட் மருத்துவமனையில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் சிகிச்சை பெற வருவார்கள். இங்கு அவசர தீவிர சிகிச்சை இல்லாமல் இருந்தது.

    இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.

    பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இங்கு தீவிர சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்ததது.

    விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

    இந்த தீவிர சிகிச்சை பிரிவில் 5 படுக்கைகள் மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும், டாக்டர்கள் பணியில் இருப்பார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் இணை இயக்குனர் கண்ணகி, மருத்துவமனை முதன்மை தலைமை மருத்துவர் சதீஷ்குமார், டாக்டர்கள் குமரேசன், சந்தோஷ்குமார், அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×