search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டறம்பள்ளி பகுதியில் கடைகளுக்கு படையெடுக்கும் பாம்புகளால் வியாபாரிகள் அச்சம் Traders fear snakes invading s"

    நாட்டறம்பள்ளி பகுதியில் கடைகளுக்கு படையெடுக்கும் பாம்புகளால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ஆர்சிஎஸ் மெயின் ரோட்டில் அச்சுதன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது இவர் நேற்று முன்தினம் ஜவுளி கடையில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். 

    அதன் பிறகு நேற்று காலை வழக்கம் போல ஜவுளி கடை திறந்து ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் அச்சுதன் ஆகியோர் கடையில் இருந்தனர். சிறுது நேரத்தில் பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கடையில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    கடையின் உரிமையாளர் அச்சுதன் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஜவுளி கடையில் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பு பிடித்து அதனை அருகில் உள்ள காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் கடந்த 23 ம் தேதி பச்சூர் டோல்கேட் அருகே உள்ள டைல்ஸ் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர். இந்நிலையில் நேற்று நாட்டறம்பளளி பகுதியில் ஜவுளி கடையில் புகுந்த சாரை பாம்பு பிடிப்பட்டது. கடந்த சில நாட்களாக கடைகளுக்கு படையெடுக்கும் பாம்பு அப்பகுதியில் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
    ×