search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் தீ மிதி திருவிழா"

    பவளந்தூரில் ஸ்ரீ கரகமுத்து மாரியம்மன் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டு வனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பவளந்தூரில் ஆயிரம் வருடம் பழமையான ஸ்ரீ கரக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 
    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து மாரியம்மன் திருவிழா கொண்டாடுவது வழக்கம். 

    இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று பவளந்தூரில்அமைந்துள்ள கங்கையில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பம்பை மேளதாளங்களுடன் சக்தி கரகம் அழைத்தும், அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து வந்தனர். பின்னர் ஸ்ரீ கரக முத்துமாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    பின்னர் கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.வான வேடிக்கையால் கிராமமே மத்தப்பூ மாதிரி காட்சியளித்தது.
    ×