search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine Russia war | உக்ரைன் ரஷியா போர்"

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நாட்டு மக்களிடம் வீடியோ மூலம் உரையாற்றினார்.

    02.06.2022

    15.05: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர், ‘கடத்தப்பட்ட குழந்தைகள் ரஷியாவில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது சட்டவிரோத செயலாகும். மேலும் இதுவரை 261 குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

    10.26: ரஷிய, உக்ரைன் போர் 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதம், நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த போரில் ரஷியாவிற்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கவுள்ளார்.

    04.50: ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பீட்டில்  ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர்  ஆண்ட்ரி யெர்மக், கூட்டாளிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைன் அமெரிக்க கொடிகளுக்கு இடையே இரண்டு நாடுகளும் கைகுலுக்கும் படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    02.50: உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கு உதவி வருவதாக போலந்து தெரிவித்துள்ளது. ரஷியா படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான  உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்பட பிற முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்குவதற்காக தனது நாடு எல்லைப் பகுதியில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக போலந்தின் பிரதமர் மேட்யுஸ் மொராவில்க்கி கூறியுள்ளார்.

    01.40: ரஷிய படைகளின் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு பயந்து,  செவெரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரசாயன ஆலை பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் தஞ்சம் அடைந்துள்ளதாக அப்பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார். அந்த ஆலை பெரிய நகரத்தையொட்டி அமைந்திருப்பதால் இது மரியபோல் உருக்கு ஆலையை விட பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    12.30: செவெரோடோனெட்ஸ்க் நகரின் வடக்கே உள்ள ரிட்னே மற்றும் ஸ்வியாடோஹிர்ஸ்க் நகரங்களில் ரஷிய படைகள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு கிராமங்களை கைப்பற்ற அவர்கள் முயன்ற நிலையில் உக்ரைன் ராணுவத்தின் பதிலடி காரணமாக பின்வாங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்குப் பகுதியில் உள்ள நகரின் அமைதிச் சதுக்கத்தைச் சுற்றி ரஷிய வீரர்கள் இருப்பது மற்றும் அந்த பகுதியில் பல உடல்கள் கிடப்பது தொடர்பாக வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    01.06.2022

    15.56: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்தன. இந்த நடவடிக்கை ரஷியாவை பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினாலும், பிற உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எரிபொருள் விலைகளின் உயர்வும் ரஷியாவுக்குதான் சாதகமாக அமையும் என கூறியுள்ளனர். 

    13.30: கடந்த இரண்டு நாட்களாக நடந்த தீவிர சண்டைக்கு பிறகு,  ரஷியப் படைகள் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகரின் பாதிக்கும் அதிகமான பகுதிகள் இப்போது ரஷிய படைகளால் (செச்சென் போராளிகள் உட்பட) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் கூறி உள்ளது.

    12:30: உக்ரைனுக்கு நவீன ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை அமெரிக்கா வழங்கும் எனவும், இதன்மூலம் போர்க்களத்தில் உள்ள முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க முடியும் என்றும் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் கூறினார்.

    11:00: ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஒரு ரசாயன ஆலையைத் தாக்கியது பைத்தியக்காரத்தனம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார். 

    04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஐ.நா.சபை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவிற்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், உக்ரைனில் நடைபெறும் போரினால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை பெரிய அளவில் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். இதை நிவர்த்தி செய்ய ரஷியாவில் இருந்து தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதை பைடன் அரசு ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    02.30: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு  மேல் தடை விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம்  ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

    12.20:  ரஷிய படைகள் செவெரோடோனெட்ஸ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும், தங்கள் படையினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் உக்ரேனிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் தாக்குதலால் அந்த நகரத்தில் 90 சதவீத வீடுகள் சேதமடைந்துள்ளன, முக்கியமான உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போரில் மக்களின் உயிரைப் பணயம் வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப்போவதாக 90 சதவீதம் நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்து இருந்தது.

    31.5.2022

    20.45: அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ரஷியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை வாங்க பல நாடுகள் அஞ்சி வருகின்றன. இதற்கிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பார்வை இந்தியா மற்றும் சீனா பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது.

    17.00: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 3 மாதத்தைக் கடந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக 2 ரஷிய ராணுவ வீரர்கள் மீது உக்ரைன் குற்றம் சுமத்தி வழக்கு விசாரணை நடத்தியது. இந்நிலையில், இருவருக்கும் தலா 11 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
     
    14.33:  ரஷியாவின் கேஸ்ப்ரோம் நிறுவனம் நெதர்லாந்திற்கு எரிவாயு விநியோகிப்பதை நிறுத்தியதாக அறிவித்துள்ளது.

    10.35: உக்ரைனுக்கு எதிரான போரை கண்டிக்கும் விதமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் அதில் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்த ஆண்டு இறுதிக்குள் 90% நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    04.10: உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மெலிடோபோல் நகரை,  நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகே இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக மேயர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.

    02.50: ரஷியா, உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வர உதவுவதற்கு தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷிய அதிபர் புதின் உடனான உரையாடலின் தெரிவித்துள்ளார். இதற்காக இஸ்தான்புல் நகரில் ரஷியா, உக்ரைன் மற்றும் ஐ.நா.சபை அதிகாரிகளை சந்தித்து பேசவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    01.40: உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷியப் படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரான்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் ரஷியா நடத்திய பீரங்கித் தாக்குதலுக்கு பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    12.30: ரஷியாவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்
    தெரிவித்துள்ளார். பைடன் அரசு ரஷியாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைன் நாட்டிற்கு மேம்படுத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அனுப்பத் தயாராகி வருகிறது என்ற செய்திகள் வெளியான நிலையில் பைடன் இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதற்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதினிடம், துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    21.10: இந்த ஆண்டுக்கான யூரோவிஷன் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற உக்ரைன் போட்டியாளர்கள், வெற்றி கோப்பையை 900,000 டாலருக்கு விற்றதாக அறிவித்தனர். இந்த பணத்தை  தங்கள் நாட்டு ராணுவத்திற்கு ட்ரோன்கள் வாங்க பயன்படுத்தப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

    30.5.2022

    20:30: உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார்.

    17:30: பிரான்ஸ் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா  உக்ரைனுக்கு வந்துள்ளார். புச்சா நகரில் உள்ள தேவாலயத்திற்கு வந்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்று இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்றார். 

    16:00: உக்ரைனுடனான மோதலில் ரஷியா தனது ராணுவத்தில் நடுத்தர மற்றும் இளைய அதிகாரிகளை அதிக அளவில் இழந்திருப்பதாக தெரிகிறது, இது எதிர்காலத்தில் ராணுவத்தின் செயல்திறன் பலவீனமாவதற்கு வாய்ப்பாகி விடும் என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளம் அதிகாரிகளின் இழப்பு, அதன் ராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை நவீனமயமாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

    11:50: பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். கீவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, உக்ரைனுக்கு பிரான்ஸ் கூடுதல் ஆதரவை வழங்குவது குறித்து அறிவிப்பார் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் போதுமான அளவு செயல்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் கொலோனாவின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் இன்று கூடி உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் தெரிவிக்க உள்ளனர்.  

    09.28: உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ரஷியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் தனது நாட்டு ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.8 லட்சம் கோடியை ஜெர்மனி ஒதுக்கியுள்ளது.

    04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் உள்ள அனைத்து முக்கியமான உள்கட்டமைப்புகளும் ரஷிய படையெடுப்பால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இடைவிடாத பீரங்கித் தாக்குதல்களை நடத்தி  90 சதவீத கட்டிடங்களை ரஷிய படையினர் சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    01.30: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய மற்றும் உக்ரைன் படைகள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் படைகளை எதிர்கொள்ளும் வகையில் ரஷிய வீரர்கள் தீவிர வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    12.10: ரஷிய அதிபர் புதின்,  செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக்வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா,  செர்பியாவுக்கு இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் இரு நாடுகளும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் என்றும் இரு தலைவர்களும் அப்போது  ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ரஷியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் ஜெர்மனி அரசு, தனது ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.8 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.

    30.5.2022

    20:30: உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார்.

    17:30: பிரான்ஸ் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா இன்று உக்ரைனுக்கு வந்துள்ளார். புச்சா நகரில் உள்ள தேவாலயத்திற்கு வந்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்று இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்றார். 

    16:00: உக்ரைனுடனான மோதலில் ரஷியா தனது ராணுவத்தில் நடுத்தர மற்றும் இளைய அதிகாரிகளை அதிக அளவில் இழந்திருப்பதாக தெரிகிறது, இது எதிர்காலத்தில் ராணுவத்தின் செயல்திறன் பலவீனமாவதற்கு வாய்ப்பாகிவிடும் என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளம் அதிகாரிகளின் இழப்பு, அதன் ராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை நவீனமயமாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

    11:50: பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். கீவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, உக்ரைனுக்கு பிரான்ஸ் கூடுதல் ஆதரவை வழங்குவது குறித்து அறிவிப்பார் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் போதுமான அளவு செயல்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் கொலோனாவின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது.

    இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் இன்று கூடி உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் தெரிவிக்க உள்ளனர்.  

    09.28: உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ரஷியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் தனது நாட்டு ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.8 லட்சம் கோடியை ஜெர்மனி ஒதுக்கியுள்ளது.

    04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் உள்ள அனைத்து முக்கியமான உள்கட்டமைப்புகளும் ரஷிய படையெடுப்பால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இடைவிடாத பீரங்கித் தாக்குதல்களை நடத்தி  90 சதவீத கட்டிடங்களை ரஷிய படையினர் சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    01.30: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய மற்றும் உக்ரைன் படைகள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் படைகளை எதிர்கொள்ளும் வகையில் ரஷிய வீரர்கள் தீவிர வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    12.10: ரஷிய அதிபர் புதின்,  செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக்வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா,  செர்பியாவுக்கு இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் இரு நாடுகளும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் என்றும் இரு தலைவர்களும் அப்போது  ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    29.5.2022

    18:30: டான்பாசை கைப்பற்றுவதற்கான போரில் ரஷிய படைகள் முக்கிய நகரங்களான செவரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் பகுதிகளில் பிடியை இறுக்குகிறது. லிசிசான்ஸ்க்கில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கெய்டே கூறி உள்ளார். 

    18:00: இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போதைய நிலைமை மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டார்.  குறிப்பாக டான்பாஸ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் உள்ள சில பகுதிகளை விரைவில் பிடிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக  கூறினார்.

    17:00: உக்ரைனில் இருந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக போலந்தில் தனது நடவடிக்கைகளை ஐ.நா. அகதிகள் அமைப்பு விரிவுபடுத்துகிறது. 

    உக்ரைனில் இருந்து அகதிகள் வரும் முக்கிய நாடாக போலந்து உள்ளது. பிப்ரவரி 24ல் போர் தொடங்கியதில் இருந்து 35 லட்சத்துக்கும் அதிகமானோர் போலந்திற்குள் நுழைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 100,000 க்கும் அதிகமான மக்கள் வந்தனர். அதன்பின்னர் படிப்படியாக குறைந்து மே மாதத்தில் தினசரி சுமார் 20,000 பேர் என்ற அளவிற்கு வந்துள்ளனர்.

    15.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும், அவர் கூறுகையில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்துவது, எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.

    10.50: உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார்.

    அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை மேலும் சீர்குலையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    02.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.  மேலும்  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ் புறநகர் பகுதியில் இருந்து ரஷியப் படைகளை விரட்ட தீவிரமாக போரிட்டு வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    01.40: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலைப்பகுதியில் உள்ள  2,500 உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    12.30: கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார். உலக கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை ரஷியாவும் உக்ரைனும் வழங்கி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
    29.5.2022

    18:30: டான்பாசை கைப்பற்றுவதற்கான போரில் ரஷிய படைகள் முக்கிய நகரங்களான செவரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் பகுதிகளில் பிடியை இறுக்குகிறது. லிசிசான்ஸ்க்கில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கெய்டே கூறி உள்ளார். 

    18:00: இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போதைய நிலைமை மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டார்.  குறிப்பாக டான்பாஸ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் உள்ள சில பகுதிகளை விரைவில் பிடிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக  கூறினார்.

    17:00: உக்ரைனில் இருந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக போலந்தில் தனது நடவடிக்கைகளை ஐ.நா. அகதிகள் அமைப்பு விரிவுபடுத்துகிறது. 

    உக்ரைனில் இருந்து அகதிகள் வரும் முக்கிய நாடாக போலந்து உள்ளது. பிப்ரவரி 24ல் போர் தொடங்கியதில் இருந்து 35 லட்சத்துக்கும் அதிகமானோர் போலந்திற்குள் நுழைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 100,000 க்கும் அதிகமான மக்கள் வந்தனர். அதன்பின்னர் படிப்படியாக குறைந்து மே மாதத்தில் தினசரி சுமார் 20,000 பேர் என்ற அளவிற்கு வந்துள்ளனர்.

    15.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும், அவர் கூறுகையில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்துவது, எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.

    10.50: உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார்.

    அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை மேலும் சீர்குலையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    01.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.  மேலும்  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ் புறநகர் பகுதியில் இருந்து ரஷியப் படைகளை விரட்ட தீவிரமாக போரிட்டு வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    00.40: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலைப்பகுதியில் உள்ள  2,500 உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    00.30: கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார். உலக கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை ரஷியாவும் உக்ரைனும் வழங்கி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    28.5.2022

    22.00: ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ப்ஸ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றிபெற மாட்டார் என்றார்.

    நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு நேரடியாக போரில் பங்கேற்காது. உக்ரைன் மீது போர் தொடுத்த விஷயத்தில் அதிபர் புதின் அதன் நட்பு நாடுகளின் வலிமையை குறைவாக எடை போட்டுவிட்டார் எங்கள் நோக்கம் இந்தப் போரில் ரஷியா வெற்றிபெறக் கூடாது என்பதே. அவர் வெற்றியும் பெறமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

    16.45: உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ரூ.45 லட்சம் கோடி) இருக்கும் என கீவ் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது.

    02.15: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் அழித்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.  உக்ரைனில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் மீது ரஷிய அதிபர் புதின் தாக்குதல் நடத்தி வருகிறார். இது உக்ரைனின் கலாச்சாரத்தையே அழிக்கும் ஆபத்தை குறிக்கிறது’ என கூறியுள்ளார்.

    09.40: ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் 4031 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 4,735 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மரணங்கள் டோநெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகள் நடந்துள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2,274 பொதுமக்கள் இறந்துள்ளனர்.

    04.10:  ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

    03.10: ரஷியாவிற்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும்  நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    02.45: உக்ரைன் அதிபர்  ஜெலஸ்ன்கியுடன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த இத்தாலி அரசின் ஆதரவை அவர் எடுத்துரைத்தார். 

    போர் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளை அச்சுறுத்தும் உணவு நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரைன் துறைமுகங்களை திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தனர்.

    01.50: ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

    வரும் மாதங்களில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பைடன் நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் பிளிங்கன் அப்போது கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    12.40:  ரஷியா ஆர்த்தடாக்ஸ் தேவாலய அமைப்பில் இருந்து பிரிவதாக உக்ரைன்  ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஆதரவாக செயல்படும் ரஷிய தேவாலய தலைவரை அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த போர் கடவுளின் கட்டளையை மீறுகிறது என்றும், இதை கண்டிப்பதாகவும, பொதுமக்களை கொல்ல வேண்டாம் என்றும் உக்ரைன்  ஆர்த்தடாக்ஸ் தேவால தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து கடல் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் என்று, உக்ரைனை, ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.
    28.5.2022

    22.00: ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ப்ஸ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றிபெற மாட்டார் என்றார்.

    நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு நேரடியாக போரில் பங்கேற்காது. உக்ரைன் மீது போர் தொடுத்த விஷயத்தில் அதிபர் புதின் அதன் நட்பு நாடுகளின் வலிமையை குறைவாக எடை போட்டுவிட்டார் எங்கள் நோக்கம் இந்தப் போரில் ரஷியா வெற்றிபெறக் கூடாது என்பதே. அவர் வெற்றியும் பெறமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

    16.45: உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ரூ.45 லட்சம் கோடி) இருக்கும் என கீவ் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது.

    02.15: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் அழித்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். ‘ரஷிய அதிபர் புதின் உக்ரைனில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார். இது உக்ரைனின் கலாச்சாரத்தையே அழிக்கும் ஆபத்தை குறிக்கிறது’ என கூறியுள்ளார்.

    09.40: ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் 4031 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 4,735 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மரணங்கள் டோநெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகள் நடந்துள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2,274 பொதுமக்கள் இறந்துள்ளனர்.

    04.10:  ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

    03.10: ரஷியாவிற்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும்  நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    02.45: உக்ரைன் அதிபர்  ஜெலஸ்ன்கியுடன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த இத்தாலி அரசின் ஆதரவை அவர் எடுத்துரைத்தார். 

    போர் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளை அச்சுறுத்தும் உணவு நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரைன் துறைமுகங்களை திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தனர்.

    01.50: ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

    வரும் மாதங்களில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பைடன் நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் பிளிங்கன் அப்போது கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    12.40:  ரஷியா ஆர்த்தடாக்ஸ் தேவாலய அமைப்பில் இருந்து பிரிவதாக உக்ரைன்  ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஆதரவாக செயல்படும் ரஷிய தேவாலய தலைவரை அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த போர் கடவுளின் கட்டளையை மீறுகிறது என்றும், இதை கண்டிப்பதாகவும, பொதுமக்களை கொல்ல வேண்டாம் என்றும் உக்ரைன்  ஆர்த்தடாக்ஸ் தேவால தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    27.5.2022

    21.30: உக்ரைன் தனது துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து கடல் கண்ணி வெடிகளை அகற்றி பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  உக்ரைன் உடனான போர் காரணமாக உலக சந்தைகளுக்கு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள சிரமங்களுக்கு ரஷியாவைக் குறை கூறும் முயற்சிகள் ஆதாரமற்றவை என்று புதின் குறிப்பிட்டுள்ளார். 

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவிற்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    16.45: உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் லுகன்ஸ்க் நகரில் உள்ள செவிரொடொனெட்க்ஸ் நகரில் உக்ரைன், ரஷிய படைகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக செவிரொடொனெட்க்ஸ் நகரில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 சதவீத குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    13.54: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்தன. அந்த நாடுகளின் நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இதற்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின், ‘வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இடமளிக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு சாதனங்களை இனி ரஷியாவே உருவாக்கும்’ என கூறினார்.

    10.38: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு சில உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதுகுறித்து முதல் யூரேசிய பொருளாதார அமர்வில் பேசிய ரஷிய அதிபர் புதின், ‘ரஷியாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த நினைப்பது சாத்தியமற்றது. அவ்வாறு செய்ய விரும்பும் நாடுகள், தங்களுக்கு தாங்களே தீமை விளைவித்து கொள்கின்றன’ என கூறினார்.

    04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

    03.30: மரியுபோல் துறைமுக பகுதியில் இருந்து நேற்று ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் வெளியேறியதாக ரஷிய வெளியுறவுஅமைச்சகம்தெரிவித்துள்ளது.  அசோவ் துறைமுக பகுதி வழியாகவும், கருங்கடலில் உள்ள கெர்சன் மற்றும் ஒடெசா வழியாகவும் வெளிநாட்டு கப்பல்கள் உக்ரைனில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படும் என்று  ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இதையடுத்து பாதுகாப்பு வழி உருவாக்கப்பட்ட நிலையில்,  ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    02.20: உக்ரைன் உடனான போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை  உறுதி செய்து ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  உக்ரைனில் போர் தொடங்கியது முதல் ரஷிய ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ரஷிய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

    01.30: உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு நடவடிக்கைகள் உலகிற்கு ஒரு திருப்புமுனையாக இருப்பதாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடனான மாஸ்கோவின் உறவுகள் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    12.10: சில வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் மகிச்சியடைவதாகவும், இதனால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் அவற்றின் இடத்தைப் பிடிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    உலக நாடுகள் குறித்து முதல் யூரேசிய பொருளாதார அமர்வில் ரஷிய அதிபர் புதின் பேசினார்.

    26.5.2022

    14:00: உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடக்கும் கடுமையான போர் மற்றும் ரஷிய படைகள் முக்கிய தொழில்துறை நகரத்தை சுற்றி வளைக்க நெருங்கி வரும் நிலையில், இந்த போரில் வெற்றி பெறுவதற்கு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் போதுமான உதவிகள் செய்யவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எந்த வரம்புகளும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக கனரக ஆயுதங்களை அனுப்பவேண்டும் என தெரிவித்தார்.

     13:00: உக்ரைன் ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை ரஷியா அனுமதிக்க உள்ளது. இவ்வாறு உக்ரைனுக்கு உதவுவதற்கு ஈடாக, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.

    11.14: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் நகரங்களை முற்றுகையிட்டுள்ளது. 

    அந்த இரு நகரங்களையும் மூன்று பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி  வருகின்றனர். இந்த இரு நகரங்களையும் பிடித்துவிட்டால் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதும் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள்  வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    08.53: கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா போரினை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இருநாட்டு தூதரகங்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைதி உடன்படிக்கைக்காக ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உக்ரைன் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் தொடரும் என கூறினார்.

    06.00: உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, உக்ரைனுக்கான அமைதித் திட்டம் ஒன்றை இத்தாலி முன்மொழிந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என ரஷியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா விமர்சித்துள்ளார். 

    02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார். 

    அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 89 நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் ஒடெசா நகரத்தை ரஷிய ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
    24.5.2022

    14.20: உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தின் ரஷியாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகம், தனது பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைக்குமாறு அதிபர் புதினை கேட்கக் கூடும் என ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    13.30: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஐரோப்பிய பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சினை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷியா தடுப்பதால் உலக அளவில் உணவு விநியோக நெருக்கடி மேலும் மோசமடையும் என்று குவாட்  உச்சி மாநாட்டில் பேசிய பைடன் தெரிவித்துள்ளார். 

    11.10:  கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தின் டான்பாஸில் உள்ள ஆயுதக் கிடங்கு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    06:00: உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 3 மாதங்களில் பலியான ரஷிய படை வீரர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 9 ஆண்டுகள் நடந்த போரில் சோவியத் யூனியன் சந்தித்த உயிரிழப்புகளுக்கு சமம் என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, உக்ரைன் போரில் ரஷியா இதுவரை 15 ஆயிரம் வீரர்களை இழந்திருக்கலாம் என இங்கிலாந்து கூறுகிறது.

    01:30: குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது பேசிய அவர், உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகளின் அடிப்படையில் நீண்ட கால விலையை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    23.5.2022

    20:30: உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, இத்தாலி பரிந்துரை செய்துள்ள அமைதித் திட்டத்தை பரிசீலித்து வருவதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    20:00: ரஷிய வீரர் மீதான போர்க்குற்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்த குடிமகனை கொன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    19:45: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு நாங்கள் கேட்கும் அனைத்து ஆயுதங்களும் தேவை என வலியுறுத்தினார். ரஷியா மீது அதிகபட்ச பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    19:30: ரஷியப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில்துறை மையப் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. 

    17:00: உக்ரைனின் டெஸ்னா நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    15.03: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் கோதுமை விளையும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள ஒடெசா நகரத்தை முற்றுகையிட்டுள்ளது. அறுவடை காலம் நெருங்கும் நிலையில், அந்நகரத்தை மீட்காவிட்டால், உக்ரைனில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அந்நகரத்தில் 400 டன் கால்நடை தீவணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை ரஷியா அழித்தது குறிப்பிடத்தக்கது.

    10.51: உக்ரைனுக்கு எதிரான போரை குறிக்கும் விதமாக ரஷ்ய படைகள், ‘Z’ மற்றும் ‘V’ என்ற 2 ரஷ்ய எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த எழுத்துக்களை உக்ரைனில் பயன்படுத்த அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தடை விதித்துள்ளார். கல்வி மற்றும் வரலாற்று நோக்கங்களுக்கு மட்டும் அந்த எழுத்துக்களை பயன்படுத்த ஜெலன்ஸ்கி அனுமதி வழங்கியுள்ளார்.

    06.30: போலந்து அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றார். கீவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து உரையாடினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு. ரஷிய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்தக் குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக் கூடாது. ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும் என்றார்.

    03.45: பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம் என தெரிவித்தார்.

    00.30: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்கு ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

    போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

    ×