search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 தனிப்படை அமைப்பு"

    தஞ்சையில் நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த மர்மநபர்களை 5 தனிப்படை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    சென்னை கீழ்ப்பாக்க த்தைச் சேர்ந்தவர் மணி (வயது 55). சென்னையில் உள்ள நகைகள் மொத்த வியாபாரியிடம் பணியாற்றி வரும் இவர், ஒவ்வொரு ஊராகச் சென்று கடைகளில் நகைகள் விற்பனை செய்து வருகிறார். அப்போது இவர் விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம்.

    இதுபோல, தஞ்சாவூருக்கு நகைகளை விற்பதற்காக வந்த  நகைகள் கொண்ட பையுடன் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்றார். 

    உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடு ப்பதற்காக பையை கீழே வைத்தார். பணம் கொடுத்த பிறகு கீழே பார்த்தபோது பைகாணாமல் போனது தெரியவந்தது. 

    இதுகுறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் மணி அளித்த புகார் மனுவில் 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும் என மொத்தம் 6.2 கிலோ தங்கம், ரூ. 14 லட்சம் ரொக்கமும் கொண்ட பை திருட்டு போனதாகத் தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு மொத்தம்  ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து, போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    இச்சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக இன்ஸ்பெ க்டர்கள் கருணாகரன் (கிழக்கு), ஸ்ரீதர் (தெற்கு), சந்திரா (மேற்குஆகியோர் தலைமையில் 3 தனிப்ப டைகள் அமைக்க ப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள 2 தனிப்படைகளும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, கடை யிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைத் தனிப்ப டையினர் பார்த்தபோது, வெள்ளை நிற சட்டை அணிந்த 8 அல்லது 9 பேர் மணியின் பையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து செல்வது தெரிய வந்தது. இக்காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது  யாருக்கும் சரிவர அடையாளம் தெரியவில்லை.

    இதையடுத்து கண்கா ணிப்பு கேமராவில் பதிவான காட்சி வீடியோவை தமிழ்நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு குற்றவாளி களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தனிப்படை போலீசார் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது தவிர குற்றவாளிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று இருந்தால் அவர்களை பிடிப்பதற்காக அந்தந்த மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

    இப்படி நாலா புறமும் கொள்ளையர்களை போலீசார் தேடுவதால் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×