search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் வழங்கல்"

    மயிலாடுதுறையில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 99 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்.எல்.. நிவேதா முருகன் வழங்கினார்.

    செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மாலை மாலை அணிவித்து மாயாதை செய்தனர்.

    தொடர்ந்து சின்னூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் ஜி. சித்ரா மற்றும் திருக்களாச்சேரி உதவிபெறும் பள்ளி சத்துணவு சமையலர் எஸ்.சீதா ஆகியோர் பணியின்போது காலமானதை தொடர்ந்து அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.5 லட்சத்துக்கான ஆணைகள் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் அவரது திரு உருவப் படத்திற்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், பரசலூர் வர்த்தக அணி சங்க தலைவர் பாலையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறையில் திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் முன்னிலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிட்டப்பா அங்காடியில் நடைபெற்றது.

    இதில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஏழைகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடினர். இதில் நகர துணை செயலாளர் ஆர். கே. சங்கர் உள்ளிட்ட திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×