search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை"

    • சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் 2 சிலைகளும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன.
    • ஒரு சிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை ஆகும்.

    சென்னை:

    தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலை களை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிலைகளை மீட்டனர்.

    இதில் ஒரு சிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை ஆகும். இன்னொரு சிலை ராமானுஜர் சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆனால் சிலையின் வலது புரத்தில் பாம்பு மற்றும் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலை முருகர்  சிலையாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    2 சிலைகளையும் போலீசார் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜைகளையும் செய்தனர். இந்த சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு எப்படி வந்தன? என்பது தெரிய வில்லை.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த சிலைகளை பழமையான கோவில்களில் இருந்து திருடி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 சிலைகளையும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தார்.

    2 சிலைகள் பின்னணி குறித்தும், சிலைகளை கடத்தி வந்தவர்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் 2 சிலைகளும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் கடத்தல்காரர்கள் யார்? சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட் டவை? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர்.

    ×