search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swing festival"

    • வேங்கராயன் குடிகாடு வில்லாயி அம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
    • நிகழ்ச்சியில் காச வளநாட்டைச்சேர்ந்த 18 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் 16ஆண்டுக ளுக்குப் பிறகு பெருந்திருவிழா வரும் மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.

    இதை ஒட்டி அதற்கான காப்பு கட்டுதல் மற்றும் அம்பாள் ஊஞ்சல் உற்சவம் காணும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

    முன்னதாக வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.

    பின்னர் அம்மன் கோவிலை சுற்றி மண்டபத்தில் உள்ள பிரகாரத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டது .

    அங்கே அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து படையல் இடப்ப ட்டது.

    பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் காச வளநாட்டைச்சேர்ந்த 18 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 48 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளையும் வில்லாதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற உள்ளது.

    பெருந்திருவிழாவில் மே மாதம் 20-ந் தேதி அம்மன் வீதி உலா, 21-ந் தேதி ஆட்டு கிடா வெட்டுதல், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர் சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர்.

    இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை நந்தவன காளியம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • விழாவின் நிறைவுநாளான 9ம் நாள் (21-ந்தேதி) நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.

    அந்த வகையில் இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலு கால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    அதன் பின்னர் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளினார். இந்நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் (19-ந்தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்அளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

    அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு8.15 மணிமுதல் 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்குபுறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார். விழாவின் நிறைவுநாளான 9ம் நாள் (21-ந்தேதி) நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. ஊரணி பொங்கலிட்டு ஊர்வலமாக வந்த பெண்கள் பால முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து செடல் உற்சவம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு தீபாரதனைகள் அபிஷேகங்கள் நடந்தது.

    இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×