search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone tree"

    தொண்டி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கல் மரமானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தொண்டி:

    தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான கடலியல் மற்றும் கடலோரவியல் துறை வளாகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு முழுநேர உயர்கல்வி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு 20 மில்லியன் அதாவது இரண்டு கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் உள்ளது. கடலில் பல்வேறு வகையான தனிமங்கள் கொண்ட மண் படிமங்கள், பாறைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகள், பவளப் பாறைகள், சங்குகள், சிப்பிகள் வைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த கல் மரமானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்த மரமானது சுனாமி,பெரு வெள்ளம் போன்ற பேரழிவுகளால் மண்ணில் புதையுண்டு பின் படிமங்களால் காலப் போக்கில் கல்லாகிப் போனது. இந்த கல்மரம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலிருந்து எடுத்து வந்து காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ×