search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spying for china"

    சீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள லீஸ்பர்க் நகரை சேர்ந்தவர் கெவின் பி.மல்லோரி (62). ராணுவ வீரரான இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தில் (சி.ஐ.ஏ.) கடந்த 2012-ம் ஆண்டு வரை உளவாளியாக பணிபுரிந்தார்.

    அதன் பின்னர் இவர் வர்த்தக ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவரது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது.

    அதன்பின்னர் இவர் ஒரு சீன இணைய தள நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். நாளடைவில் அமெரிக்காவில் இருந்து கொண்டே சீனாவுக்கு உளவு வேலை பார்த்தார். 2 தடவை சீனாவுக்கு சென்று வந்த அவர் டெலிபோன் மற்றும் இ-மெயில் மூலம் சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்.

    அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய ரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்தார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு இவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    ×