search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPI Cinemas"

    தென் இந்தியாவில் முக்கிய சினிமா திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாசை, இந்தியாவின் பிரபல குழுமமான பி.வி.ஆர். வாங்கி இருப்பதாக பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. #SPICinemas #PVRCinemas
    பி.வி.ஆர். குழுமம் நாடு முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகிறது. தென் இந்தியாவில் முக்கிய சினிமா திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாசை பி.வி.ஆர். வாங்கி இருப்பதாக பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    சத்யம் சினிமா 1974-ல் சென்னையில் ஒரே ஒரு திரையரங்காக தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் எஸ்கேப், சத்யம் சினிமா, எஸ் 2, பலாசோ என பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன் பீனிக்ஸ் மாலில் இருக்கும் சத்யம் நிறுவனத்தின் லக்ஸ் திரையரங்குகளையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியது. சத்யம் நிறுவனம் வசம் மும்பை மற்றும் தென் இந்தியாவில் மொத்தம் 76 திரைகள் உள்ளன.

    பி.வி.ஆர். நிறுவனமும் நாடு முழுக்க மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகிறது. சென்னையில் ஏற்கெனவே ஸ்கைவாக், கிராண்ட் மால் (வேளச்சேரி), கிராண்டு கலாடா (பல்லாவரம்) ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.



    பி.வி.ஆர். வசம் 60 நகரங்களில் 630 திரைகள் உள்ளன. இந்நிலையில் பிவிஆர் நிறுவனம் சத்யம் நிறுவனத்தை வாங்கி உள்ளது.

    சத்யம் திரையரங்குகளின் 71.7 சதவீத பங்குகளை ரூ.633 கோடி மற்றும் பி.வி.ஆரி.ன் சில பங்குகளைக் கொடுத்தும் மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு இந்த வர்த்தகம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என பிசினஸ் ஸ்டாண்டர்டு இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    10 நகரங்களில் (17 இடங்கள்) 76 திரையங்குகளை பெற்றிருக்கும் சத்யம் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 100 திரையங்குகளை நோக்கி தன் வர்த்தகத்தை விரிவுபடுத்த இருக்கிறது. சத்யம் திரையரங்குகளை வாங்கியதன் மூலம், இந்தியாவில் பி.வி.ஆர். திரையரங்குகளின் எண்ணிக்கை 700-ஐக் கடக்கிறது. 2020-க்குள் 1000 திரையரங்குகளைக் கடப்பதே எங்கள் நோக்கம் என்று, பி.வி.ஆர். குழுமத்தின் சேர்மன் அஜய் பிஜ்லி தெரிவித்திருக்கிறார். #SPICinemas #SathyamCinemas #PVRCinemas

    ×