search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shortage of workers"

    • எடையாளர் மட்டுமே உள்ளதால் ஒருவரே பில் போட்டு முடித்து அவரே பொருட்களை எடை அளந்து பொதுமக்களுக்கு வழங்கும் நிலை உள்ளது.
    • இப்பகுதி கடைகளுக்கு விற்பனையாளர், எடையாளர் என இரு ஊழியர்களை நிரந்தரமாக நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் ஆனந்தகிரி பகுதிகளில் இயங்கி வருகிறது.இங்கு விற்பனையாளர், எடையாளர் என இருவர் இருந்த சூழ்நிலையில் தற்போது எடையாளர் மட்டுமே உள்ளதால் ஒருவரே பில் போட்டு முடித்து அவரே பொருட்களை எடை அளந்து பொதுமக்களுக்கு வழங்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் காலை நேரங்களில் அன்றாட கூலி வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் தங்களது பணி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.அத்துடன் தினக்கூலிக்கு செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்தில் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

    குறிப்பாக ஆனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் ஒருவரே பில் போடுவது எடை அளப்பது என இரு வேலைகளையும் செய்து வருவதாலும், அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் இந்த கடையில் இருப்பதாலும் குறித்த நேரத்தில் பொருட்களை வாங்கிச் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    எனவே இப்பகுதி கடைகளுக்கு விற்பனையாளர், எடையாளர் என இரு ஊழியர்களை நிரந்தரமாக நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×