search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senguttuvan mla"

    கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கை செங்குட்டுவன் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கை செங்குட்டுவன் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆய்வு செய்தார். 
    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:- 

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இந்த பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் இங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதற்காக கடந்த 2013-ம் ஆண்டு இங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் ரூ. 5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை அது செயல்படவில்லை.

    இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மனு அளித் துள்ளேன். ஆனால் இதுவரை இந்த குப்பை கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சியும் செய்ய வில்லை. இதனால் இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருந்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குப்பை கிடங்கை சுற்றி பொதுமக்கள் குடியிருப்புகளும், ஏரிகளும் உள்ளது. சுகாதாரம் இல்லாத வகையில் 8 ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்து வருகிறது.

    எனவே, உடனடியாக இந்த குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி அகற்ற வில்லையென்றால் இந்த குப்பை கழிவுகளை அகற்ற வலியுறுத்தி, தி.மு.க. தொண்டர்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×