search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seedling work"

    • வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்
    • விவசாயிகள் எராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக எந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்யும் பணியை வேளாண்மை துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் எந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் நிகழ்ச்சி மட்றப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆத்மா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார் அனைவரையும் டி.கே. தணிகாசலம் வரவேற்றார், நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஏ பாலா கலந்துகொண்டு இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் முறையை தொடங்கி வைத்து பேசினார்

    நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், இணை இயக்குனர் ராகினி, மாவட்ட கவுன்சிலர் கே.ஏ. குணசேகரன் கே.ஏ மோகன்ராஜ், , கூட்டுறவு சங்க தலைவர்கள் குலோத்துங்கன், ராஜா, உட்பட விவசாயிகள் பலர் பேசினார்கள் இறுதியில் விவசாயி டி.கே.முருகன் நன்றி கூறினார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஏ பாலா கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்யப்படுகிறது.

    நெல் நாற்று விவசாய நிலத்தில் நட்டு வளர்க்காமல் தேங்காய் கழிவுகளில் நாற்றுகள் மொட்டை மாடியில் தட்டுகளில் வளர்க்கப்பட்டு 20 நாட்கள் கழித்து இயந்திரம் மூலம் இந்த நெல் நாற்று நடப்படுகிறது.

    இது ஒரே சீரான இடைவெளியில் நடப்படுவதால் நெல்லுக்கு காற்று மற்றும் உரங்கள் சரியான அளவில் கிடைத்து மகசூல் அதிகமாக கிடைக்கும். எலி தொல்லை இருக்காது.

    மேலும் ஒரு ஏக்கருக்கு இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதால் ரூ 4500 முதல் 7000 வரை செலவாகும் இதுவே பழைய முறையில் ஆட்களை கொண்டு நடவு செய்தால் ரூ 15 ஆயிரம் வரை செலவாகும் மேலும் 20 ஆட்கள் காலை முதல் மாலை வரை நட வேண்டும் இயந்திரம் மூலம் எளிதாக 2 மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நெல் நாற்று நடலாம் எனவே மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் விரைவில் அரசு பொறியியல் துறை மூலம் நெல் நாற்று நடும் இயந்திரம் வாடகைக்கு கிடைக்கும். 50 சதவீதம்மானியம் மூலம் நாற்று நடவு இயந்திரத்தை விவசாயிகளுக்கு வாங்க ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார்

    விவசாயத்திற்கு தற்போது ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் நெல் இயந்திரம் மூலம் நாற்று நடுவது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்

    மாவட்டத்தில் முதன்முறையாக இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்வதை பார்க்க கிராமத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர்.

    ×