search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia training"

    மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி மேற்கொள்கிறது. #Russiawartraining

    மாஸ்கோ:

    கடந்த 8 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பஷார்-அல்-ஆசாத்தக்கு ஆதரவாக ரஷியா செயல்படுகிறது. அரசு படைகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகிறது.

    சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ரசாயன குண்டுகளை வீசியதாக ரஷியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே கிழக்கு உக்ரைனில் கிரிமியா பகுதியை தன்னுடன் இணைத்து கொண்டதாகவும் புகார் உள்ளது.

    எனவே, ரஷியாவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்த்து வருகின்றன. பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்கிறது. இந்த பயிற்சி வருகிற செப்டம்பர் 11-ந்தேதி நடக்கிறது.

    அதில் ஏறத்தாழ 3 லட்சம் ராணுவ வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் தவிர 1000 போர் விமானங்கள், 900 டாங்கிகள் பங்கேற்கின்றன. இதற்கு “வோஸ்டாக்-2018” அல்லது “கிழக்கு-2018” என பெயரிடப்பட்டுள்ளது.

    ரஷியாவுடன் சீனா மற்றும் மங்கோலியா நாட்டு ராணுவமும் போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. சீனா 3200 ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்புகிறது.

    1960-ம் ஆண்டுகளில் சோவியத் யூனியனும், சீனாவும் எல்லை பிரச்சினை காரணமாக எதிரும் புதிருமாக இருந்தன. 2 நாடுகளுக்கும் இடையே போர் அபாயம் இருந்தது. கடந்த 1989-ம் ஆண்டு சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிகெல் கோர்ப்சேவ் பெய்ஜிங் வருகை தந்து சீனாவுடன் ஆன உறவை புதுப்பித்தார்.

    சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீன அதிபர் ஸி ஜின்பிங்டன் நட்புறவுடன் இருக்கிறார். அதற்கு முன்பு 1981-ம் ஆண்டு ரஷியா ‘‌ஷபாட்’ அல்லது மேற்கு என்ற பெயரில் மிகப்பெரிய போர் பயிற்சியை நடத்தியது. சோவியத் யூனியனும் அதன் நட்பு நாடுகளின் அமைப்பான வார்சாவும் இணைந்து நடத்தின.

    இறுதியாக 2017 செப்டம்பரில் ரஷியா ‌ஷபாட் போர் பயிற்சியை மேற்கொண்டது. அதில் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடும், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பெலாரசும் இணைந்து போர் பயிற்சியை நடத்தியது.

    ×