search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raveendranath MP"

    • பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பேசினார்.
    • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி ஆகியவை குறித்து தெரிவித்தார்.

    தேனி:

    பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பேசியதாவது:-

    ஜவுளித்துறையில் பாதிப்பை ஏற்படுத்திய நூல் விலை உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள ஜவுளி மற்றும் விசைத்தறி சங்கங்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதா? அவ்வாறு வந்துள்ள பட்சத்தில் விலை குறைக்கும் நடவடிக்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இதற்கு ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்ஷ்தோஷ் விளக்கம் அளித்து பேசுகையில்,

    2022 அக்டோபர் 31 வரை கச்சா பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியில் இருந்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டு பருத்தி விலைகள் 2022 மே மாதத்தில் அதன் உச்ச நிலையான ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தில் இருந்து ரூ.88 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கூம்புக்கும் விலை கிலோவுக்கு ரூ.40 குறைக்கப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து மத்திய வேளாண் பல்கலை க்கழகத்தை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரவீந்திரநாத் பேசும்போது, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி ஆகியவற்றில் சிறந்த மையமாக விளங்க ஒரு மத்திய வேளாண் பல்கலை க்கழகத்தை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வணிக விமானங்களின் அவசியத்தை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    ×