search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration MLAs study"

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் நியாயவிலைக்கடையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் நியாயவிலைக்கடையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீரென ஆய்வு மேற் கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது ரே‌ஷனில் இலவச அரிசி வாங்கும் போது தேயிலை, ரவை, சோப்பு போன்ற பொருட்களையும் சேர்த்து வாங்கினால் தான் இலவசஅரிசி வழங்குவோம் என கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறியபொது மக்கள் கடையின் மேற் கூரை இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

    இலவச அரிசியுடன் எந்த பொருட்களையும் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என கடை ஊழியர்களை எச்சரித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.கடையின் மேற்கூரை இடியும் அபாய நிலையில் இருப்பதை வட்ட வழங்கல் அதிகாரியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×