search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priests"

    கோவில் உண்டியலை குருக்களே திருடி சென்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

    இக்கோவிலில் கும்பகோணத்தை சேர்ந்த கணேசன் (வயது 29) என்பவர் குருக்களாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கணேசன் குருக்கள் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஒக்கநாடு மேலையூருக்கு வந்தார்.

    பின்னர் அங்கு வீரனார் கோவிலில் இருந்த உண்டியலை அப்படியே தூக்கிகொண்டு ஒரு மூட்டையாக கட்டினார். பின்னர் நண்பர் உதவியுடன் மூட்டையை தூக்கி கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    மாலையில் கோவிலுக்கு வந்த கிராம மக்கள். உண்டியல் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற கணேசன் குருக்கள், அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனால் கொள்ளை போன உண்டியலில் ரூ.1 லட்சம் வரை பணம் இருந்திருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ஒரத்தநாடு அருகே சமையன்குடிகாடு கிராமத்தில் சந்தான மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த ஒரு பவுன் தாலி திருட்டு போனது. இந்த திருட்டிலும் கணேசன் குருக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் இந்த திருட்டு குறித்தும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    உண்டியலை கோவில் குருக்களே திருடி சென்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    நகரி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை முறை அடிப்படையில் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.

    தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்தார்.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

    பணி ஓய்வு உத்தரவை ரமண தீட்சிதலுவிடம் வழங்க அவரது வீட்டுக்கு தேவஸ்தான ஊழியர்கள் சென்றபோது அவர் இல்லாததால் நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டி சென்றனர்.

    இதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    இன்னும் ஓரிரு நாளில் அந்த அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இது குறித்து தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு கூறியதாவது:-

    கடந்த 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு திருப்பதி கோவிலில் வாரிசு அர்ச்சகர் பணி நியமனத்தை ரத்து செய்தது. ஆனால் அதற்காக இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 144-ன்படி அவர்களின் பணிக்கும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பாவனை, மரியாதைக்கு எந்தவித குறையும் இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அர்ச்சகர்கள் முதுமையில் தங்களை காத்து கொள்ள ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. ஆனால் அர்ச்சகர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் உரிய மரியாதையை அளிக்கவில்லை. பூஜை கைங்கர்யங்களை விரைவில் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் ஏழுமலையான் கைங்கர்யங்களில் குறைபாடு ஏற்படுகிறது.

    இதுபற்றி நான் வெளியில் கூறியதால், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 வயதுக்கு நிர்ணயித்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்திய சட்டப்பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்சவரம்பை நிர்ணயிக்க கூடாது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன் என்றார்.

    திருப்பதி கோவில் புதிய தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த வேணு கோபால் தீட்சிதலு நியமிக்கப்பட்டார். மேலும் தலைமை அர்ச்சகர்களை பைடிபள்ளி குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ண சேஷாசல் தீட்சிதலு, பெத்திண்ட்டி குடும்பத்தை சேர்ந்த சீனிவாச தீட்சிதலு, திருப்பதி அம்மா குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராசு தீட்சிதலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகர் பணியில் இருந்த 32 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளனர்.
    ×