search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porsche"

    போர்ஷ் நிறுவனத்தின் புதிய டேகேன் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு ஆட்டோ உற்பத்தியாளரான போர்ஷ் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டின் போது புதிய டேகேன் மாடல் இந்தியாவின் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறும். 

    முன்னதாக போர்ஷ் டேகேன் மாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் பெயர் துருக்கி மொழியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. போர்ஷ் டேகேன் மாடல்- டேகேன், டேகேன் 4எஸ், டேகேன் டர்போ மற்றும் டேகேன் டர்போ எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டேகேன் கிராஸ் டூரிஸ்மோ வேரியண்டிலும் கிடைக்கிறது. 

     போர்ஷ் டேகேன்

    இந்த எலெக்ட்ரிக் கார் 402 பி.ஹெச்.பி. திறன், 344 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 431 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் பெர்பார்மன்ஸ் பேட்டரி பிளஸ் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் செல்லும்.
    இந்தியாவில் 2019 போர்ஷ் 911 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Porsche911



    இந்தியாவில் 2019 போர்ஷ் 911 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கரெரா எஸ் வேரியண்ட் விலை ரூ.1.82 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என்றும் கரெரா எஸ் கேப்ரியோலெட் விலை ரூ.1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகமான எட்டாம் தலைமுறை வெனரெபிள் ஸ்போர்ட்ஸ்கார் ஆகும். காரின் வெளிப்புற வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. உள்புறமும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    புதிய காரின் மிகப்பெரும் மாற்றங்களாக என்ஜின் மற்றும் ஃபிரேம் இருக்கின்றன. புதிய தலைமுறை போர்ஷ் 911 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதில் புதிய ஃபியூயல் இன்ஜெக்ஷன் அமைப்பு வழங்கப்படுவதால் செயல்திறன் மேம்படுகிறது. இதன் 3.0 லிட்டர் மோட்டார்கள் 7-ஸ்பீடு மேனுவல் அல்லது 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.



    புதிய போர்ஷ் கார்களின் பின்புறம் அதிகளவு அலுமினியம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் காரின் எடை சீராக இருக்கிறது. இத்துடன் முதல்முறையாக பின்புற சக்கரங்களுக்கு ஸ்டீரிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காரை சிறப்பாக கட்டுப்படுத்தி கார்னெரிங் செய்ய முடியும். 

    இதுதவிர புதிய காருடன் ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இது லான்ச் கண்ட்ரோல், கியர்பாக்ஸ்-க்கென புதிய மென்பொருள் உள்ளிட்டவை கிடைக்கிறது. கரெரா எஸ் மாடல் மணிக்கு அதிகபட்சம் 307 கிலோமீட்டர் வேகத்திலும் கரெரா 4எஸ் மாடல் மணிக்கு அதிகபட்சம் 305 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ×