search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inspector jail"

    மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும் வழக்கு பதியாமல் அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டருக்கு 1½ வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    சிவகாசி தேவர் நகரைச் சேர்ந்தவர் துரை. இவரது மனைவி சுகன்யா (வயது 19) கடந்த 2013-ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    முன்னதாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த அவரிடம் அப்போதைய சிவகாசி மாஜிஸ்திரேட்டு ஜோசப்ஜாய் மரண வாக்குமூலம் பெற்றார். அப்போது தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்ததாக சுகன்யா வாக்குமூலம் அளித்தார்.

    இதனை பதிவு செய்து கொண்ட மாஜிஸ்திரேட்டு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிடார்.

    நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதியாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

    இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு ஜோசப்ஜாய் சாத்தூர் கோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி சண்முகவேல்ராஜ் தீர்ப்பை வாசித்தார். அதில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு 1½ வருட ஜெயில், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக குறிப்பிப்பட்டுள்ளது. தற்போது ரவிச்சந்திரன் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×