search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Price"

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால் கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 69 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 1 ரூபாய் 76 காசு உயர்ந்துள்ளது. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரொல்- டீசல் விலை உயராமல் இருந்தது.

    தேர்தலின் போது பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தால் அது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 13-ந்தேதியில் இருந்து இன்றுவரை தினமும் உயர்ந்துள்ள பெட்ரோல்- டீசல் விலை விபரம் வருமாறு:-

    கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 69 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 1 ரூபாய் 76 காசு உயர்ந்துள்ளது.

    இதுபற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், பெட்ரோல்- டீசல் விலை வரும் வாரங்களில் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம்

    ஒரே சமயத்தில் விலையை உயர்த்தினால் மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் தினமும் 25 காசு 30 காசு வீதம் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் பங்குக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது 1 லிட்டர் அல்லது 100 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் போடுவதால் விலை உயர்வை பற்றி கேள்வி கேட்காமல் சென்று விடுகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Petrol #Diesel
    ×