search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participated marathon"

    • சுதந்திர தினத்தையொட்டி நடந்த பிரம்மாண்ட மாநில அளவிலான மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர்.
    • இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த பிரம்மாண்ட மாநில அளவிலான மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர்.

    இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த 75-வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் 3 நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில் புதுவையில் வீடு தோரும் தேசிய கொடியினை பறக்க விட பா.ஜனதாவினர் பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஓர் அங்கமாக செல்வகணபதி எம்.பி. ஏற்பாட்டில், சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி புதுவை கடற்கரை காந்தி சிலையில் இன்று அதிகாலை தொடங்கியது.

    மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.‌ஜெ .சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்தனர்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஐந்து கிலோமீட்டர் தூரம் புல்வார் பகுதியை சுற்றிலும், 17 வயது உடையவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் எட்டு கிலோமீட்டர் தூரம் அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர், பாலாஜி தியேட்டர் நெல்லிதோப்பு சிக்னல், கம்பன் கலையரங்க வழியாக மீண்டும் கடற்கரை சாலையை வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 3000-திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் ஓடினர். மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர்கள், காவல்துறையினர் ஒருங்கி ணைப்பு செய்திருந்தனர்.

    ×