search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "park fees hike"

    நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திகழ்கிறது. நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் பசுமை புல்வெளி, இத்தாலியன் கார்டன், ஜப்பான் கார்டன், கண்ணாடி மாளிகை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10, கேமிராவுக்கு ரூ.30, வீடியோ கேமிராவுக்கு ரூ.100 என்று வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் தோட்டக்கலை துறை சார்பில் நுழைவு கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.

    அதன்படி பெரியவர்களுக்கு ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.10 ஆக இருந்த கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேமிராவுக்கு ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீடியோ கேமிராவுக்கு கட்டண மாற்றம் இல்லை.

    கட்டண உயர்வு குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, நுழைவு கட்டண உயர்வு சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் பூங்காவுக்குள் சென்றதும் ரம்யமாக உள்ளதால் இந்த கட்டண உயர்வு பெரிதாக தெரியவில்லை என்றனர்.

    ×